கடாபி என்பவருக்கு தெ.கி. பல்கலைக்கழகத்தில் முறைகேடாக பதவி வழங்க முயற்சி; தடுத்து நிறுத்தியது பேரவை: ஆசிரியர் சங்கம் தகவல்

🕔 May 14, 2018

– அஹமட் –

டாபி எனும் நபரை, தென்கிழக்குப் பல்கலைக்கழக விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் பதவிக்கு முறைகேடான வழியில் நியமிப்பதற்காக, அந்தப் பல்லைக்கழகத்தின் உபவேந்தர் எடுத்த முயற்சியினை, பல்கலைக்கழக பேரவை தடுத்து நிறுத்தியுள்ளதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், அந்த சங்கத்தின் தலைவர் எம். அப்துல் ஜப்பார் இந்தத் தகவலை வெளியிட்டார்.

“ஐ.எம். கடாபி எனும் நபரை, பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத்துறைப் பணிப்பாராக முறைகேடான வழியில் நியமிப்பதற்கு உபவேந்தர் நடவடிக்கை மேற்கொண்டார். பல்கலைக்கழக பேரவையின் அனுமதியினை இதற்காகப் பெற்றுக் கொள்ள முயற்சித்தபோது, கடாபி என்பவரின் கல்வித் தகைமை தொடர்பில் சர்ச்சைகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் பதவிக்கு கடாபி என்பவரை நியமிப்பதற்கான அனுமதியை பேரவை மறுத்தது” என, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ஜப்பார் மேலும் கூறினார்.

இதுபோன்று வழங்கப்பட்ட, பல்கலைக்கழக சட்ட ஆலோசகர் பதவிக்கான நியமனத்தினையும் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளதாகவும் ஆசிரியர் சங்கத் தலைவர் இதன்போது தெரிவித்தார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்