கலாநிதியானார் ஹிஸ்புல்லா

🕔 May 14, 2018
– ஆர். ஹசன் –

நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.

இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்றில், அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற முதலாவது அரசியல்வாதி என்ற பெறுமையை அவர் இதன் மூலம் பெற்றுக்கொண்டார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மெற்ரோபொலிடன் கல்லூரியின் பட்டமளிப்பு விழா, கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது, தனக்கான கலாநிதிப் பட்டத்தை மலேசியாவின் லிங்கன் பல்கலைக்கழக துணை அதிபரிடமிருந்து ராஜாங்க அமைச்சர் பெற்றுக் கொண்டார்.

Alliance International University-Zambia பல்கலைக்கழகத்திடமிருந்து மெற்ரோபொலிடன் கல்லூரி ஊடாக ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இப்பட்டத்தை பெறுவதற்கு ‘ஆயுத மோதல்களில் மத்தியஸ்தம்’ எனும் தலைப்பில் 292 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையினை சமர்ப்பித்திருந்தார்.

பட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்