தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர், கபட நாடகமாடுகிறார்: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

🕔 May 13, 2018

– மப்றூக் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் பதவிக்கு, அந்தப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் விண்ணப்பித்துள்ளமையினால், அவரை பதில் உபவேந்தராக நியமிக்கக் கூடாது என, தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு புதிய உபவேந்தர் ஒருவரை நியமிப்பதற்கான காலத்தை, தற்போதைய உபவேந்தர் இழுத்தடிப்புச் செய்து வருவதாகவும் அதற்காக பல்வேறு கபட நாடகங்களை அவர் மேற்கொண்டு வருவதாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

ஒலுவில் கிறீன் வில்லாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை, தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடத்தியது.

இதில் தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எம். அப்துல் ஜப்பார், அந்த சங்கத்தின் உப தலைவர் கலாநிதி ஏ.எப்.எம். அஷ்ரப் மற்றும் சங்கத்தின் பொருளார் கலாநிதி எம்.ஐ.எம். ஹிலால் ஆகியோர் கலந்து கொண்டு பேசிய போதே, இந்த விடயங்களைக் கூறினர்.

இந்த ஊடக சந்திப்பின் போது, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் தொடர்பில், பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்த தென்கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர், அவற்றினை விபரித்தனர்.

ஊடகவியலாளர் சந்திப்பின் வீடியோவைக் காண

Comments

புதிது பேஸ்புக் பக்கம்