மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர், மீண்டும் வென்றார்: தேர்தல் மூலம் தெரிவான மூத்தவராகவும் சாதனை

🕔 May 10, 2018

லேசியாவின் முன்னாள் பிரதமர் மஹ்திர் முகம்மத் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரு வெற்றியைப் பெற்றுள்ளது.

92 வயதாகும் மஹதிர் தலைமையிலான கூட்டணி, 60 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த பரிஸான் நஷனல் கூட்டணியை இந்தத் தேர்தலில் தோற்கடித்துள்ளது.

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம்சுமத்தப்பட்ட தனது அரசியல் மாணவரும், மலேசிய பிரதமருமான நஜிப் ரசாக்கை எதிர்த்து இந்த தேர்தலில் மஹ்திர் போட்டியிட்டார்.

இதற்காக அவர் தனது அரசியல் ஓய்வை விலக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மஹ்திர் முகம்மத்தின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மலேசியாவில் ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவையாகும்.

தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மஹ்திர் முகம்மட்; ”நாங்கள் பழிவாங்க நினைக்கவில்லை. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விரும்புகிறோம்” என்று கூறினார்.

இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை தனது பதவியேற்பு நடக்கும் என்று மஹ்திர் முகம்மட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகில் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்களில் மிக வயது மூத்தவர் என்ற பெருமையை இந்த தேர்தல் வெற்றியின் மூலம் மஹ்திர் முகம்மட் பெறுகிறார்.

Comments