பிபிசி செய்தியாளர் அஸ்ஸாமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு

🕔 May 9, 2018

பிபிசி யின் இலங்கை செய்தியாளர் அஸ்ஸாம் அமீனை, குற்ற புலனாய்வு திணைக்களத்தில் நாளை வியாழக்கிழமை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்ட தகவலொன்றுக்கு கருத்திட்டமை தொடர்பாக விளக்கமொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

“எட்டாவது நாடாளுமன்றின் இரண்டாவது அமர்வில் ஜனாதிபதி ஆரம்ப உரையாற்றினார்” என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

அதற்கு கருத்திட்டிருந்த அஸ்ஸாம் அமீன்; “நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆனால் அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். செயலில் காட்டுங்கள்” என பதிவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ டுவிட்டர் கணக்கு ஹெக் செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்தது.

இருந்தபோதும், தற்போது நிலைமை சரி செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே செய்தியாளர் அஸ்ஸாம் அமீனிடம் இது தொடர்பில் விளக்கம் ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம்  அழைப்பு விடுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்