மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டு வரும் பிரதமரின் திட்டம்: நடக்க விடமாட்டோம் என்கிறார் எஸ்.பி

🕔 May 7, 2018

முர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, முன்னாள் சமுர்த்தி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சமுர்த்தி வங்கி – மத்திய வங்கியின் கீழ் கொண்டுவரப்படும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஐ.தே.கட்சியின் மே தின கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.

இந்த நிலையிலேயே, அதைச் செய்வதற்கு தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று, முன்னாள் அமைச்சர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் சமுர்த்தி வங்கியை அவ்வாறு மத்திய வங்கியின் கீழ் கொண்டு வருவதாயின் நாடாளுமன்றத்தில் அதற்காக மூன்றிரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, மத்திய வங்கியின் கண்காணிப்பின் கீழ் சமுர்த்தி வங்கியைக் கொண்டுவர முடியாது என, சமுர்த்தி சட்டம் தெளிவாகக் குறிப்பிடுவதாகவும் முன்னாள் அமைச்சர் திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இதற்காக தேவைப்படும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை ஒருபோதும் தாம் வழங்கப் போவதில்லை என்றும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்