சிகிச்சைக்கு உதவுங்கள்: உங்களால் எவ்வளவு முடியுமோ, அதனைச் செய்யுங்கள்

🕔 May 7, 2018

– ரபீக் பிர்தௌஸ் –

சிறுநீரகங்கள் செயலற்ற நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிந்தவூரைச் சேர்ந்த சகோதரர் ஒருவரின் சிகிச்சைகளுக்காக உதவுமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

நிந்தவூர்-19, கோயில் வீதி, இல: 130யில் வசித்து வரும் நிந்தவூர் பிரதேச செயலகப் பணியாளரான இப்றாலெவ்வை ஹசனுல் பரீட் என்பவர் தனது (A Positive) ) குருதி வகையைச் சேர்ந்த இரு சிறுநீரகங்களும் செயலற்ற நிலையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்.

இதனைச் சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்துவதற்கு 40 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான முழுத் தொகையும் இவரிடமில்லாது கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

இதே வேளை இவருக்குத் திருமணமாகாத 16 வயதுடைய பெண் பிள்ளையொன்றும் இருக்கிறார்.

எனவே, முடியுமானவர்கள் இவரின் சிகிச்சைக்கு உதவுமாறு வேண்டப்படுகின்றார்கள்.

இவரைத் தொடர்பு கொள்ள விரும்புவோர்:
077 6313891, 077 3206379.

இவருக்கு உதவ விரும்புவோர்:
IBRA LEBBE HASANUL FAREED,
People’s Bank,
Nintavur Branch.
A/C No:- 296- 2-001- 2-0005840.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்