தெ.கி.பல்கலைக்கழகம்; அறபு, இல்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழ் தொடங்கி வைப்பு

🕔 May 3, 2018

– றிசாட் ஏ. காதர் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழின் ஆரம்ப நிகழ்வு, நேற்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய பீட மண்டபத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மசாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலத்திரனியல் ஆய்விதழின் பிரதம ஆசிரியரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான எம்.எஸ்.எம். ஜலால்டீன் அறிமுக உரையினை நிகழ்த்தினார்.

ஆய்விதழின் உதவி ஆசிரியரும் விரிவுரையாளருமான எப்.எச்.ஏ. ஷிப்லி, பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பெருந்தொகையான மாணவர்கள் இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது அறபு இஸ்லாமிய கற்கைகளுக்கான இலத்திரனியல் ஆய்விதழிழை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச். அப்துல் சத்தார், ஆய்விதழின் பிரதம ஆசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்டீன் மற்றும் பீடாதிபதி எஸ்.எம்.எம். மசாஹிர் ஆகியோர் இணைந்து உத்தியோகபூர்வமாக தொடங்கி வைத்தனர்.

இலங்கையில் அறபு இஸ்லாமிய கற்கைகளுக்கான ஆய்விதழ், இலத்திரனியல் வடிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்