வடக்கு – கிழக்கு கோரிக்கையை த.தே.கூட்டமைப்பு கைவிடவில்லை: சுமந்திரன்

🕔 May 2, 2018

டக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்கிற தமது கோரிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னும் கைவிடவில்லை என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக 1987ஆம் ஆண்டு தற்காலிகமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன.

இருந்தபோதும், 2007ஆம் ஆண்டு இரண்டு மாகாணங்களையும் தனித்தனி மாகாணங்களாகப் பிரித்து, உச்ச நீதிமன்றம் தீர்பொன்றினை வழங்கியிருந்தது.

ஆயினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று, தமிழ் கட்சிகளில் அநேகமானவை கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்