தினக்குரலுக்கு இது முதல் தடவையல்ல; முகம்மது நபி என்று கூறி, வாளுடன் காட்டூன் உருவம் வரைந்ததை மறந்து விட முடியாது

🕔 May 2, 2018

– அஹமட் –

தினக்குரல் பத்திரிகை முஸ்லிம்களை இழிவுபடுத்த முயற்சிப்பது இதுவொன்றும் முதல் தடவையல்ல.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் இனவாதத்தோடு செயற்படுவதாக, கடந்த சனிக்கிழமை தினக்குரல் பத்திரிகை முன்பக்கத் தலைப்பு செய்தியொன்றினை வெளியிட்டது.

இவ்வாறானதொரு செய்தியினை வெளியிடுவதன் மூலம், முஸ்லிம்களிடமிருந்து என்ன வகையான எதிர்ப்புகள் கிளம்பும் என்பது தெரியாமல், அந்தச் செய்தியை தினக்குரல் வெளியிடவில்லை.

மிகவும் திட்டமிட்ட வகையில்தான் அந்தச் செய்தியை தினக்குரல் வெளியிட்டது.

இப்போது, முஸ்லிம்கள் கடுமையான எதிர்ப்பினைக் காட்டுவதால், தவறுக்கு வருந்துவதாக இன்னொரு செய்தியை தினக்குரல் இன்று வெளியிட்டுள்ளது.

குரூரமான காரணங்களை முன்னிறுத்தியே தினக்குரல் இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை முதலில் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தினக்குரலுக்கு இது முதல் தடவையல்ல. சில வருடங்களுக்கு முன்னர், முகம்மது நபி எனக் குறிப்பிட்டு, காட்டூன் உருவமொன்றினை வெளிட்டிருந்த தினக்குரல், அந்த உருவத்தின் கையில் வாள் ஒன்றினையும் வரைந்திருந்தது.

இதனையடுத்தும் தினக்குரலுக்கு எதிராக முஸ்லிம்கள் மத்தியில் பாரிய எதிர்ப்புக் கிளம்பியது. அதனையடுத்து “தவறுதலாக நடந்துவிட்டது” எனக் கூறி, அந்த விவகாரத்திலிருந்து தினக்குரல் தப்பித்தது.

தினக்குரல் பத்திரிகையை இப்போது வீரகேசரி நிறுவனம்தான் கொள்வனவு செய்து நடத்துகின்றது. அப்படிப் பார்த்தால், தினக்குரல் பத்திரிகையின் இப்போதைய தவறுக்கு வீரகேசரி நிறுவனம்தான் பொறுப்புக் கூற வேண்டும்.

தினக்குரல் பத்திரிகைக்கு முஸ்லிம் மக்கள் தடை விதிப்பதென்றால், முதலில் வீரகேசரி பத்திரிகையைத்தான் புறக்கணிக்க வேண்டும்.

முஸ்லிம்களை திட்டமிட்டே புண்படுத்துவதும் பின்னர் சாட்டுப் போக்குக்கு வருத்தம் தெரிவிப்பதும் தினக்குரலுக்கு வாடிக்கையாகி விட்டது.

எனவே, தினக்குரலின் வருத்தத்தை முஸ்லிம் சமூகம் இனியும் ஏமாளித்தனமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

சரியான ‘அடி’ கொடுப்பதன் மூலமாகவே, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண முடியும்.

அந்த ‘அடி’ என்ன என்பதை முஸ்லிம் சமூகம் உடனடியாகத் தீர்மானிக்க வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்