அரை கிலோ கஞ்சாவுடன் திருகோணமலையில் நபர் கைது

🕔 May 2, 2018

 திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரைகிலோ கேரளா கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை நேற்று செவ்வாய்கிழமை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அக்போபுர பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கந்தளாய் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தக் கைது இடம்பெற்றது.

இதன்போது குறித்த நபரிடமிருந்து அரைகிலோ கேரளா கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளன்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், இன்று புதன்கிழமை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Comments