ஹொரவபொத்தனை பிரதேச சபைத் தலைவருக்கு விளக்க மறியல்

🕔 April 27, 2018

ஹொரவபொத்தானை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 06 பேரையும் விளக்க மறியலில் வைக்குமாறு கெபிட்டிகொல்லாவ நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் நிறுவனமொன்றின் முகாமையாளர் ஒருவரை தாக்கி, அவரிடமிருந்து பொருட்களைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், ஹொரவபொத்தானை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோதே, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Comments