தேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்கள் உள்ளதாக, ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவிப்பு

🕔 August 25, 2015

Kabeer hasim - 02
– அஸ்ரப் ஏ. சமத் –

தேசிய அரசாங்கமொன்றினை அமைப்பதில் சிக்கல்கள் காணப்படுவதாக, ஐ.தே.கட்சியின் செயலாளர் கபீர் ஹாசிம் இன்று கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

அமைச்சுக்களை பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தேசிய அரசாங்கத்தில் இணையவுள்ளவர்களுடன் முரண்பாடுகள் உள்ளன. எனவே, அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில், தேசிய அரசாங்கமொன்றினை அமைப்போம். அல்லது, மறுபக்கத்தில் உள்ளவர்களை இணைத்துக் கொண்டு, தனித்து ஆட்சியமைப்போம் என்றும் அவர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்க, பிரதம மந்திரியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னா், இன்று செவ்வாய்கிழமை – கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிரந்தார். இதன்போது, பிரதம மந்திரியுடன் வருகை தந்த ஜ.தே.கட்சியின் செயலாளா்  கபீா் ஹாசிம் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே, மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

அமைச்சரவையை நியமிக்கும் நடவடிக்கை, மேலும்  02 அல்லது 03 நாட்கள் பிட்போடப்பட்டுள்ளன. ஜ.தே.கட்சிக்கு 106 ஆசனங்கள் கிடைத்துள்ளன. நாங்கள் தனித்து ஆட்சியமைப்பதற்கு இன்னும் சில ஆசனங்களே தேவையாக உள்ளன. ஐ.தே.கட்சியுடன்  இணைந்து ஆட்சியமைக்கும் பொருட்டு, மகிந்த ராஜபக்சஷ அணியிலுள்ள சிலரும் எங்களுடன் பேசுகின்றனர். ஸ்ரீ.ல.சு.கட்சியிலுள்ளவர்களும் எங்களுடன் இனைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனா்.

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுவாா்த்தை சரிவரும் பட்சத்தில் ஆட்சியமைப்போம். அல்லது எங்களுடன் இனையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சோ்த்து,  125  நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஐ.தே.கட்சியினால் ஆட்சியமைக்க முடியும். அதுகுறித்தும் நாங்கள் பேசுகின்றோம். அதுமட்டுமல்ல, ஜே.வி.பி  மற்றும் த.தே.கூட்டமைப்பு ஆகியவையும் எங்களுக்கு ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்துள்ளன.

தேசிய அரசாங்கம் அமை்பபதில் பல சிக்கல்கள் உ ள்ளன.  அவற்றுக்கு சுமூகமான முடிவுகள் கிடைத்தால், தேசிய அரசாங்கம் என்கிற நிலைப்பாட்டினைத் தொடருவோம். இல்லையென்றால், மறுபக்கத்தில் இருந்து வருபவா்களை இணைத்துக் கொண்டு, பெரும்பான்மை அரசாங்கத்தை அமைப்போம்” என்றார்.Kabeer hasim - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்