வெள்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி

🕔 April 26, 2018

– க. கிஷாந்தன் –

லையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நாவலப்பிட்டி நகரத்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இன்று வியாழக்கிழமை மாலை வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது.

நாவலப்பிட்டி நகரத்தில் தபால் அலுவலகத்தின் முன்பாகவும், நாவலப்பிட்டி – கண்டி வீதியில் ஒருபகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்தோடு நீர் செல்லும் வடிக்கான்கள் மூடியுள்ளமை காரணமாக, நீர் வெளியேறி வீதிக்கு செல்வதனால் பிரதான வீதியினூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நகரின் பாதைகளில் வெள்ளப்பெருக்கெடுத்துள்ளமையினால், நகருக்கு வருகை தந்தோர் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

Comments