ரவியை பிரதித் தலைவராகத் தெரிவு செய்தமையை எதிர்த்து, ஜோசப் மைக்கல் பெரேரா ராஜிநாமா

🕔 April 26, 2018

முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலிருந்து ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவராக தெரிவு செய்தமையினை எதிர்த்து,  ஜோசப் மைக்கல் பெரேரா இந்த முடிவினை எடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு நேற்றைய தினம் நபர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கையினை கட்சியின் அரசியல் பீடம் மேற்கொண்டது.

இந்த நிலையில், இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை, அரசியல் குழுவின் தெரிவுகளை செயற்குழு ஆராய்ந்த போது, அந்த தீர்மானத்துக்கு எதிர்பை தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் முன்னாள் நிதியமைச்சரான ரவி கருணாநாயக்கவும் சம்பந்தப்பட்டார் என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமையினை அடுத்து, அவர் அமைச்சுப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்