அமைச்சர் ஹக்கீம், கனேடிய உயர் ஸ்தானிகர் அலுவலக வர்த்தக தூதுக்குழு சந்திப்பு

🕔 April 25, 2018
லங்கைக்கான கனேடிய உயர் ஸ்தானிகள் அலுவலகத்தின் வர்த்தக ஆணைக்குழுவின் பிரதிநிதி ஆவன்தி கூங்ஜீ உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று புதன்கிழமை அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நகர மயமாக்கல் காரணமாக ஏற்படக்கூடிய சுத்தமான குடிநீருக்கான கேள்விகள் அதிகரித்து வருவதால், அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதிலும் கிராமப்புறங்களுக்கான நீர் மூலங்களை கண்டறிந்து அவற்றை மக்கள் பாவனைக்கு பயன்படுத்துவதிலுமுள்ள சவால்களுக்கு முகம்கொடுப்பது தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதன்போது, கழிவுநீரை சுத்திகரித்தல் மற்றும் திண்மக் கழிவகற்றல் என்பவற்றை பொறுத்தவரை தமது அமைச்சு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினூடாக பல்வேறு செயற்திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தூதூதுக் குழுவினரிடம் தெரிவித்தார்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்