ஐ.தே.க. தவிசாளராக கபீர் ஹாசிம் தெரிவு; செயலாளரானார் அகிலவிராஜ் காரியவசம்

🕔 April 25, 2018

க்கிய தேசியக் கட்சியின் தவிசாளராக அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் சபை, இன்று புதன்கிழமை மாலை அலறி மாளிகையில் கூடிய போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது கட்சியின் பொதுச் செயலாளராக அகிலவிராஜக் காரியவசம், தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க ஆகியோரும் புதிதாக தெரிவாகியுள்ளனர்.

அமைச்சர் சஜீத் பிரேமதாஸா கட்சியின் பிரதித் தவிசாளராக இதன்போது தெரிவாகியுள்ளதோடு, உப தலைவராக ரவி கருணாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் ஏனைய பதவிகளுக்கான பெயர்கள் நாளை அறிவிக்கப்படும் எனவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தீர்மானங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை இடம்பெறும் போது, அங்கு முன்வைக்கப்படும் எனவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்