முன்னறிவித்தலின்றி தொடரும் நீர் வெட்டு; மக்களைப் பற்றிச் சிந்திக்காத முட்டாள்களின் கவனத்துக்கு…

🕔 April 23, 2018

– அஹமட் –

ம்பாறை மாவட்டம் கரையோரைப் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக முன்னறிவித்தலின்றி நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு வருவதால், மக்கள் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, இறக்காமம் மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு முன்னறிவித்தல் இன்றி நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, பல சமயங்களில் மிகவும் குறைந்தளவு அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தேவையானளவு நீரை விடவும் குறைந்தளவு நீர், கொண்டவட்டுவான் பிரதேசத்திலிருந்து கிடைப்பதனாலேயே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜே.எம். கரீம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மக்களுக்கு இது தொடர்பில் எதுவித அறிவிப்பினையும் நீர் வழங்கல் அதிகாரசபையினர் விடுக்கவில்லை.

மக்களின் நலன் தொடர்பில், நீர் வழங்கல் அதிகார சபையின் இப் பிரதேச அதிகாரிகள் மிகவும் அசட்டையுடன் செயற்படுகின்றமை இதன் மூலம் தெளிவாகின்றதாக மக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, இன்று திங்கள்கிழமையும் முன்னறிவித்தலின்றி நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் பாடசாலைகளில் மதிய உணவு உட்கொண்ட மாணவர்கள், தமது தட்டுக்களை சுத்தம் செய்வதற்கும், நீர் அருந்துவதற்கும் முடியாமல் தவித்தமையினை காணக் கிடைத்தது.

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமின் வசமுள்ள அமைச்சின் கீழ், நீர் வழங்கல் அதிகார சபை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்