அமித் வீரசிங்க உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 April 23, 2018

ண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபரான, மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேர், தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை தெனியாய நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன்போது, அவர்கள் அனைவரையும் மே மாதம் 02ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மஹசோன் பலகாய அமைப்பின் தலைவரான அமித் வீரசிங்க எனும் சந்தேக நபரை, பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்தனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை இவர் வழிநடத்தியமையினை நிரூபிக்கும் வகையிலான வீடியோக்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments