கேரள கஞ்சா 35 கிலோகிராமுடன், புத்தளம் நபர்கள் மூவர் கைது

🕔 April 18, 2018
– பாறுக் ஷிஹான் –

கேரதீவு   சங்குப்பிட்டிப் பாலத்தில் வைத்து 35 கிலோகிராம் எடையுடைய கஞ்சா பொதிகளை  பூநகரி பொலிஸார் இன்று புதன்கிழமை கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து புத்தளத்திற்கு இந்த கஞ்சாவை கடத்த முயன்ற மூன்று சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘பட்டா’ ரக வாகனத்தில் இன்று அதிகாலை சுமார் 35 கிலோகிராம் கஞ்சா கடத்தப்படுவதாக வடக்கு மாகாண சிரேஷ்ட  பொலிஸ்மா அதிபர் றொசான் பெனாண்டோவுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் பகுதியை சேர்ந்தவர்களாவர். அவர்களிடமிருந்து 35 கிலோகிராம் எடையுடைய கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன என தெரியவருகிறது.

Comments