மாந்தை கிழக்கு பிரதேச சபையும், மக்கள் காங்கிரஸ் வசமானது

🕔 April 18, 2018

முல்லைத்தீவு மாவட்டத்தில், மாந்தை கிழக்கு (பாண்டியன் குளம்) பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

மேற்படி சபையின் முதலாவது அமர்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றபோது,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்ட மகாலிங்கம் தயானந்தன் (நந்தன்) 07 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

இவருக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 04 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 02 வாக்குகளும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் 01 வாக்கும் கிடைக்கப் பெற்றன.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சி.செந்தூரன் 06 வாக்குகளைப் பெற்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 06 வாக்குகள் மாத்திரமே இவருக்குக் கிடைத்தன.

இந்த சபையில் பிரதித் தவிசாளராக போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆர். சிந்துஜன் 07 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 04 வாக்குகளும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 02 வாக்குகளும், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் 01 வாக்கும் இவருக்குக் கிடைத்தன.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சி. ராஜேஸ்வரி 06 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments