அது நேற்று; இது இன்று: ரெஜினோல்ட் குரே மீண்டும் வட மாகாண ஆளநராக நியமனம்

🕔 April 13, 2018

த்திய மாகாண ஆளுநராக நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ரெஜினோல்ட் குரே, இன்று வெள்ளிக்கிழமை வட மாகாண ஆளுநராக சத்தியப் பிரமாணம் செய்துள்ள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, வடமாகாணத்துக்கான ஆளுநராக இவர் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஊவா மாகாண ஆளுநராக நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட பி.பி. திஸாநாயக்க, இன்று மத்திய மாகாண ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

எவ்வாறாயினும், ஊவா மாகாணத்துக்கான பதில் ஆளுநராகவும் பி.பி. திஸாநாயக்க பதவி வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments