முஷர்ரப்பின் இடைநிறுத்தம் தொடர்பில், வசந்தம் நிருவாகத்துடன் பேசினேன்: முஸ்லிம் மீடியா போரம் தலைவர் அமீன் தகவல்

🕔 April 12, 2018

 – புதிது செய்தியாளர் –

சந்தம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் முஷர்ரப், அந்த தொலைக்காட்சியில் காலை வேளையில் இடம்பெறும் செய்தித்தாள் கண்ணோட்ட நிகழ்ச்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில், வசந்தம் தொலைக்காட்சி நிருவாகத்துடன் தான் பேசியதாகவும், விரைவில் அந்த விவகாரம் தொடர்பில் சாதகமான நடவடிக்கையொன்றினை எடுப்பதாக நிருவாகம் தன்னிடம் கூறியதாகவும், முஸ்லிம் மீடியோ போரம் அமைப்பின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் ‘புதிது’ செய்தித் தளத்துக்குத் தெரிவித்தார்.

அதேவேளை, ஊடகவியலாளர் முஷர்ரப்பை தொடர்பு கொள்வதற்கு தான் பல தடவை முயற்சி செய்தபோதிலும், முஷர்ரபிடமிருந்து பதில் கிடைக்கவில்லை எனவும் அமீன் கூறினார்.

ஊடகவியலாளர்களுக்கு அநீதியிழைக்கப்படும் போது, எந்தவிதமான பக்கச் சார்புகளுமின்றி, அவர்களுக்காக குரல் கொடுப்பதில் தான் ஒருபோதும் பின்னின்றதில்லை எனவும் மூத்த ஊடகவியலாளர் அமீன் சுட்டிக்காட்டினார்.

மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் முறையிட்டமைக்கிணங்க, வசந்தம் தொலைக்காட்சியின் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து முஷர்ரப் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்