யாழில் தலைமறைவாகத் திரிந்த ஹக்கீம்; ஊடகவியலாளர்கள் மீது பாய்ச்சல்

🕔 April 11, 2018
யாழ்ப்பாணத்த்துக்கு நேற்று செவ்வாய்கிழமை பயணம் செய்திருந்த மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம்; ஊடகவியலாளர்களுக்குத் தலைகாட்டாமல் மறைந்து கொண்டு தனது வாகனங்களை அடிக்கடி மாற்றியதுடன் தனது கட்சி ரகசிய கூட்டம் நடாத்தும் இடங்களையும் அடிக்கடி மாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மன்னார் பிரதேச சபையை நேற்றைய தினம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து, திருகோணமலையில் இருந்து விசேட விமானம் ஒன்றின் ஊடாக ஹக்கீம் குழுவினர் பலாலியை வந்தடைந்தனர். இதனையடுத்து மன்னார் பிரதேசத்திலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பீனர்கள் மற்றும் வட்டார உறுப்பினர்கள் என நூற்றுக்கணக்கானவர்ள் செயலமர்வு என்ற பெயரில் யாழ்ப்பாணம் ப்ளு வேல் ஹோட்டலுக்கு அழைக்கப்பட்டனர். அதேவேளை, அழைக்கப்பட்டவர்களை சந்திப்பதற்கு தயாராக அமைச்சர் ஹக்கீம் மட்டும் ஜெட் விங் ஹோட்டலில் இருந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த செயலமர்வினை அறிந்த ஊடகவியலாளர்கள் அவ்விடம் சென்று செய்தி சேகரிக்க தயாரானனார்கள். இந்த நிலையில்,  வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறுக் மற்றும் வடக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் நியாஸ் ஆகியோரின் ஆதரவாளர்களால் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.

தொடர்ந்து அமைச்சர் ஹக்கீமுடைய உத்தரவுக்கமைய ஊடகவியலாளர்களை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்கு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். இதன்போது பாதுகாப்பு தரப்பினர் அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது. அத்துடன் மாலை 05 மணியளவில் ஆரம்பமாக இருந்த குறித்த மறைமுக செயலமர்வு இரவு 10 மணியளவில் ஊடகவியலாளர்கள் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்ற பின்னர், வேறு இடமொன்றில் நடைபெற்றதாக அறிய முடிகிறது.

இது தவிர, குறித்த சந்திப்பில் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தனது கட்சியின் மன்னார் முக்கியஸ்தர்கள் மீது கடும் கோபத்தை வெளிக்காட்டியதாகவும், வாதப்பிரதிவாதங்களை வைத்ததாகவும், அமைச்சரைப் பின்தொடர்ந்த ஊடகவியலாளர்களை கடிந்து கொண்டதாகவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்