மு.கா. தலைவரின் மூத்த சகோதரர் ‘கொமிசன்’ ஹசீர்; அச்சத்தில் ஊடகவியலாளர்களுக்கு ‘கல்’ எறிகிறார்

🕔 April 11, 2018

– அஹமட் – 

‘பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களித்த மு.காங்கிரஸ், அதற்கு முன்னதாக பிரதமருடன் முஸ்லிம் சமூகம் சார்பில் செய்து கொண்டதாகக் கூறப்படும் உடன்படிக்கையினை முஸ்லிம் சமூகத்துக்கு தெரியப்படுத்துதல் வேண்டும்’ எனும் தொனியில் எழுதப்பட்ட கட்டுரையையும், கட்டுரை ஆசிரியரையும் வசைபாடி – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மூத்த சகோதரர் ரஊப் ஹசீர் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினை எழுதியுள்ளமை குறித்து, பல்வேறு தரப்புக்களிலிருந்தும் கண்டனங்கள் வெளியாகி வருகின்றன.

‘தமிழ் மிரர்’ பத்திரிகையில் ‘முகம்மது தம்பி மரைக்கார்’ எனும் பெயரில் இன்று செவ்வாய்கிழமை ‘அவநம்பிக்கை’ எனும் தலைப்பில் வெளியான கட்டுரை தொடர்பாகவே, மு.கா. தலைவரின் சகோதரர் இவ்வாறு வசைபாடியுள்ளார்.

அந்த கட்டுரையினை ‘புதிது’ செய்தித்தளமும் மீள்பதிவு செய்திருந்தது.

குறித்த கட்டுரையில்; பிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை எதிர்த்து வாக்களிப்பதற்காக, முஸ்லிம் காங்கிரசுக்கு பல கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டதாக ராகித ராஜபக்ஷ, அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச ஆகியோர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை பொய்ப்பிக்க வேண்டுமாயின், பிரமருடன் முஸ்லிம் காங்கிரஸ் செய்து கொண்டதாகக் கூறப்படும் ஒப்பந்தத்தை வெளியிட வேண்டிய தேவை உள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இவற்றினைப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலேயே, கட்டுரையாளருக்கும் கட்டுரைக்கும் எதிராக மு.கா. தலைவரின் சகோதரர் வசை பாடியுள்ளார்.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரஸ் வாக்களிப்பதற்காக, அந்தக் கட்சிலுள்ள 07 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 7.5 கோடி ரூபாய் வீதம் லஞ்சம் பெறப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் புதல்வர், அவருடைய பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார். ஆனால் அதற்கு எதிராக, எதுவும் செய்வதற்கு வக்கற்ற மு.கா. தலைவரும், அவரை வைத்து பிழைப்பு நடத்தும் அவருடைய சகோதரர் ரஊப் ஹசீர் போன்றோரும், அதைச் சுட்டிக்காட்டி எழுதுகின்ற ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தூசிப்பதானது கேவலமான செயற்பாடாகும் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மு.காங்கிரசின் அரசியல் செயற்பாடுகளுக்காக அச்சிடப்படும் துண்டுப் பிரசுரம் முதல், அந்தக் கட்சி சார்பில் வெளியிடப்படும் பெரிய பதாதைகள்  வரையிலான அத்தனை அச்சு வேலைகளையும் பொறுப்பெடுத்து, அவற்றில் கொமிசன்களையும் அடித்துக் கொண்டு பிழைப்பு நடத்துகின்ற ரஊப் ஹசீர் போன்றோர், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் வசை பாடுகின்றமையானது கோமாளித்தனமானதெனவும் கூறப்படுகிறது.

மு.கா. தலைவரான தனது தம்பி, குமாரி விவகாரத்தில் சிக்கிக் கொண்ட போது, குமாரியை தேடியலைந்து பிடித்து வந்து, தம்பி ரஊப் ஹக்கீமிடம் ஒப்படைத்த ‘புனித’ காரியத்தை, இந்த ரஊப் ஹசீர் என்பவர்தான் செய்ததாக, ராஸி முகம்மத் எழுதிய பேஸ்புக் தொடரொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தமை இந்த இடத்தில் நினைவுக்கு வருகின்றமை தவிர்க்க முடியாதது.

தமது தம்பி ரஊப் ஹக்கீமை முஸ்லிம் காங்கிரசின் தலைவராக வைத்துக்  கொண்டு, அந்தக் கட்சியை தங்கள் வியாபார நிறுவனம் போல் நடத்தி, அதில் வருமானம் பெற்றுக் கொண்டு வரும் ரஊப் ஹசீரும் அவரின் குடும்பத்தாரும், அந்தக் கட்சியின் தலைமைப் பதவி, தனது தம்பியின் கைகளிலிருந்து கழன்று விடுமோ என்கிற அச்சத்தில் சமீப காலமாக மன உளைச்சலில் உள்ளதாகவும் பேச்சுகள் உள்ளன.

முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அவரின் சகோதரர் ஹசீரும், அந்தக் கட்சி சார்ந்த மற்றும் சிலரும், தங்களை விமர்சிக்கும் முஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து, இவ்வாறு கேவலமாக நடந்தமை குறித்து, இன்னும் பல கதைகளும் உள்ளன.

ரஊப் ஹக்கீமுடைய அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களில் பணிப்பாளர் பதவிகளை வகித்துக் கொண்டு, ஹக்கீமுடைய அமைச்சு வாகனங்களை தமது சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டு வரும் ரஊப் ஹசீர் போன்றோருக்கு, ஹக்கீமை காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளமையை யாரும் மறுப்பதற்கில்லை.

அதைச் செய்ய வேண்டுமாயின், குமாரியை தேடியலைந்து கூட்டிக் கொண்டு வந்து ஹக்கீமிடம் கொடுத்தமை போன்ற காரியங்களை ஹசீர் செய்யலாம். அதை விடுத்து, ஊடகவியலாளர்களை திட்டுவதும் வசைபாடுவதும் ஹசீருக்கு நல்லதல்ல.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்களை குறிவைத்துத் தாக்கும் கேடு கெட்ட செயல் ஏற்புடையதல்ல.

கிழக்கு மண்ணை வைத்துக் கொண்டு, அரசியல் பிழைப்பு நடத்தும் ஹக்கீமுக்கும், ஹசீருக்கும், அவர்களின் கூட்டத்தாருக்கும் கிழக்கு மக்களை பிடிப்பதில்லை என்பதொன்றும் பெரிய ரகசிமுமல்ல.

அந்த இரட்டை முக அரசியலுக்கு கிழக்கு மக்கள் ஆப்படிக்கத் தொடங்கி விட்டார்கள் என்பதையும், ஹசீர் போன்ற பிழைப்புவாதிகள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், இவ் விடயம் தொடர்பில் அறிந்தோர் வலியுறுத்திக் கூறுகின்றனர்.

தொடர்பான கட்டுரையைப் படிக்க: அவநம்பிக்கை

ஹசீரின் பேஸ்புக் பதிவை முழுமையாகக் காண: https://www.facebook.com/photo.php?fbid=10216067016337405&set=a.3932107310336.2167045.1509362376&type=3&theater

Comments