மன்னார் பிரதேச சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்; தவிசாளரானார் முஜாஹிர்

🕔 April 10, 2018

ன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாகக் கைப்பற்றியுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற போது, அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.எச். முஜாஹிர் 11 உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்துப்போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கொன்சஸ் குலாஸ் 10 உறுப்பினர்களின் ஆதரவினை பெற்றுக்கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர் பதவிக்கு களமிறக்கிய முஜாஹிருக்கு ஆதரவாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஒரு உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த இஸ்ஸதீன் எனும் உறுப்பினரும், சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.

இந்த பிரதேச சபைக்குகு அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் சார்பில் 07 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் இஸ்ஸதீன் 11 வாக்குகளைப் பெற்று தெரிவானார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தர்சீன் 09 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

அந்த வகையில் மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள்  காங்கிரஸ் முதன் முதலாக கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

(அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்