கண்டி இனவாதத் தாக்குதல்; அமித் வீரசிங்க உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 April 10, 2018

ண்டி – திகன பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவையும் ஏனைய 16 நபர்களையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்கிழமை தெனியாய நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதலுடன் தொடர்புபட்டார்கள் எனும் சந்தேகத்தின் பேரில், அமித் வீரசிங்கவும் மேலும் 08 பேரும் கடந்த மார்ச் 17ஆம் திகதி கைதாகினர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் இவர்களை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments