மல்லாகம் வைத்தியசாலைக்குப் பின்புறம், 21 கைக்குண்டுகள் மீட்பு

🕔 April 10, 2018

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை வைத்தியசாலைக்குப் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த 21 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நிலப் பகுதியை துப்புரவு செய்யும் போது, மேற்படி கைக்குண்டுகள் வெளியே தெரிந்துள்ளன. இதனையடுத்து யாழ்ப்பாணம் பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்தக் கைக்குண்டுகளை யுத்த காலப்பகுதியில் புலிகள் அமைப்பினர் புதைத்து வைத்திருக்கலாம் என, பாதுகாப்பு படையினர்கூறியுள்ளனர்.

இதேவேளை, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மேற்படி கைக்குண்டுகள் செயலிழக்கச் செய்யப்படும் எனவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

Comments