பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் பங்கேற்க, அமைச்சர் றிசாட் குழுவினர் லண்டன் பயணம்

🕔 April 9, 2018

 

ண்டனில் இடம்பெறும் பொதுநலவாய வர்த்தக அமைப்பின் நிகழ்வில் கலந்துக்கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான 50 பேர் கொண்ட வர்த்தக தூதுக்குழுவினர், அடுத்தவாரம் பிரித்தானியா பயணமாகின்றது.

1997ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெறும் பொதுநலவாய நாடுகளின் வர்த்தக அமைப்பின் கூட்டம் இம்முறையே முதன்முதலாக லண்டனில் இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து என்றுமில்லாத வகையில் பெரும்பாலான வர்த்தகர்கள் பங்கேற்பதாக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

“பொதுநலவாய வர்த்தக அமைப்பின் இந்த வருடத்தின் மூலோபாய பங்குதாரராக இலங்கை செயலாற்றுகின்றது. எனவே, எனது அமைச்சின் கீழான வர்த்தக திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் பலநாடுகளின் பங்குபற்றலுடனான இலங்கையின் முதலீட்டுத்துறை சார்ந்த வட்டமேசை மாநாடுகள் லண்டன் பொதுநலவாய வர்த்தக கூட்டத்தில் இடம்பெறுகின்றன” என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  

பொதுநலவாய வர்த்தக கூட்டத்தில் பங்கேற்கவுள்ள வர்த்தகர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் இடம்பெற்ற முன்னோடி கூட்டத்தில் அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் சொனாலி விஜயரட்ண இலங்கையின் சர்வதேச வர்த்தக கவுன்சிலின் தலைவர் கோசல விக்ரமநாயக்க ஆகியோரும் இதில் பங்கேற்றிருந்தனர். இம் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை இடம்பெறவிருக்கும் இந்தக்கூட்டத்தில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையும் பங்கேற்கிறது.

பொதுநலவாய நாடுகளுடனான வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இலங்கை ஒரு பாரிய பங்களிப்பை  நல்கி வருகின்றது. இலங்கையின் வருடாந்த சர்வதேச வர்த்தகத்தில்; 27 சதவீதத்தினை பொருட்கள் அடிப்படையிலும் 40 சத வீதத்தினை சேவைகளின் அடிப்படையிலும் பொதுநலவாய நாடுகளுக்கு இலங்கை வழங்குகின்றது. இலங்கையின் புதிய வர்த்தக மறுசீரமைப்பிற்கு அமைதியானதும் குறிப்பிடத்தக்கதுமான பாத்திரத்தை பொதுநலவாய நாடுகள் வகிக்கின்றது.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்