நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருப்பேன்: அர்ஜுன ரணதுங்க

🕔 April 9, 2018

“பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக நான் வாக்களித்திருந்தால், அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருந்திருக்க மாட்டேன்” என்று அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குருணாகல் வெலிகதர மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சரிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

“தோற்கடிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையானது ஒன்றிணைந்த எதிரணியினருக்குத் தேவையாக இருந்தது. அதனை ஆதரித்தவர்கள் யார் என எனக்குத் தெரியாது” எனவும் அவர் கூறினார்.

“ஆனாலும், பிரேரணைக்கு ஆதரவாக நான் வாக்களித்திருந்தால், அமைச்சரவையில் தொடர்ந்திருக்கும் தார்மீக உரிமை எனக்குக் கிடையாது” எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

பிரமதருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் குறித்தே, அர்ஜுன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார்.

Comments