‘அவர்களுடன்’ இணைந்து செயற்பட முடியாது: ஜனாதிபதிக்கு ஐ.தே.க. அறிவிப்பு

🕔 April 8, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், ஐக்கிய தேசியக் கட்சியினால் இணைந்து செயற்பட முடியாது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்தக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் தகவலை அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பிரமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எஸ்.பி. திஸாநாயக்க, சுசில் பிரேமஜயந்த, தயாசிறி ஜயசேகர, லக்ஸ்மன் யாபா அபேவர்தன, அனுர பிரியதர்சன யாப்பா, ஜோன் செனவிரட்ன, டிலான் பெரேரா, சுசந்த புஞ்சி நிலமே, சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, சுமேதா ஜயசேன, ரீ.பி. ஏக்கநாயக்க, சந்திம வீரக்கொடி, தாரனாத் பஸ்நாயக்க, லக்ஸ்மன் வசந்த உள்ளிட்ட 16 பேர் வாக்களித்திருந்தனர்.

இந்த நிலையில், மேற்படி 16 பேருக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றினைக் கொண்டுவரும் முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஈடுபட்டது.

ஆயினும், அந்த முயற்சியைக் கைவிடுமாறு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அந்த உறுப்பினர்களை அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையிலேயே, மேற்படி அறிவித்தலை ஜனாதிபதிக்கு ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்