இடியப்ப பொதிக்குள் தேள்; யாழ்ப்பாண ஹோட்டலில் வாங்கியவருக்கு அதிர்ச்சி

🕔 April 4, 2018
– பாறுக் ஷிஹான் –

யாழ்ப்பாணம் சந்தியிலுள்ள ஹோட்டலொன்றில் விற்பனை செய்யப்பட்ட உணவுப்பொதியில் தேள் ஒன்று காணப்பட்டமை அதிர்ச்சியளித்துள்ளது.

தீவக பகுதிக்கு கடமைக்கு  செல்லும் அரச உத்தியோகத்தர் கொள்வனவு செய்த காலை உணவுப் பொதியிலேயே, இவ்வாறு தேள் காணப்பட்டுள்ளது.

குறித்த அரச உத்தியோகத்தர் இன்று புதன்கிழமை காலை 6.30 மணியளவில், காலை உணவிற்வுக்காக யாழ் சத்திரச்சந்தியில் இயங்கும் ஹோட்டலில் இடியப்ப பொதியொன்றினை வாங்கிக்கொண்டு அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர், சாப்பிடுவதற்காக தான் வாங்கிய   உணவு பொதியை திறந்த போது, அதனுள் ஊற்றப்பட்டிருந்த சாம்பாரில் தேள் ஒன்று இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

குறித்த ஹோட்டல், சில காலங்களுக்கு முன்னர் சுகாதார பரிசோதகர்களால் சீல் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments