ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது: அமைச்சர் பௌசி தெரிவிப்பு

🕔 April 4, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இந்தத் தகவலை அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும் போது, அதில் கலந்து கொள்வதில்லை என்று, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னராக, நேற்று செவ்வாய்கிழமை ஒன்று கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் எனக் கோருதென்று தீர்மானித்தனர்.

இதற்கமைய, பிரதமர் ரணிலிடம் மேற்படி கோரிக்கையை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்