மருதமுனைக்கு மேயர் பதவி; இரண்டாவது முறையும் வாய்த்தது

🕔 April 2, 2018

– மப்றூக் –

ல்முனை மாநகர சபையின் மேயராக சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தெரிவானமையினை அடுத்து, மருதமுனை பிரதேசம், இரண்டாவது தடவையாகவும் மேயர் பதவியினைப் பெற்றுக் கொண்டுள்ளது.

கல்முனை மாநகரசபையின்  06ஆவது மேயராக மருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் இன்று திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்டார்.

மு.காங்கிரஸ் பிரமுகரான சட்டத்தரணி றக்கீப், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் மு.கா. சார்பில் போட்டியிட்டு, கல்முனை மாநகர சபைக்குத் தெரிவானார்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற கல்முனை மாநகர சபையின் முதல் அமர்வில், அச்சபையினுடைய தவிசாளராக றக்கீப் தெரிவு செய்யப்பட்டார்.

இதன் மூலம், மருதமுனையிலிருந்து கல்முனை மாநகர சபைக்குத் தெரிவான இரண்டாவது மேயர் எனும் அந்தஸ்த்தினை றக்கீப் பெற்றுள்ளார்.

மருதமுனையிலிருந்து கல்முனை மாநகரசபையின் முதல் மேயராக முன்னாள் செனட்டர் மர்ஹும் எஸ்.இஸட்.எம். மசூர் மௌலானா தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments