காடையர்களைப் பிடிக்க, கண்டி வந்திறங்கியது பயங்கரவாத புலனாய்வு பிரிவு

🕔 April 2, 2018

ண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இனவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய காடையர்களைக் கைது செய்வதற்காக, பயங்கரவாத புலனாய்வு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கண்டிக்கு வந்துள்ளனர்.

சி.சி.ரி.வி. காட்சிகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அநேகமானோர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கண்டி தாக்குதல்களுடன் தொடர்புடைய முன்னாள் ராணுவ உத்தியோகத்தர் உள்ளிட்ட நால்வர், நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

வன்முறையின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான ‘மஹசொன் பலகாய’ அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் நினைவுகொள்ளத்தக்கது.

இதேவேளை, திகன – கண்டி பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில், குண்டசாலை பிரதேச சபைக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர் ஒருவரை, கடந்த 28ஆம் திகதி, பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் கைது செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்