தே.காங்கிரசில் போட்டியிட்டு அட்டாளைச்சேனையில் தோற்றவருக்கு, 06 மாத நிபந்தனையில் உறுப்பினர் பதவி

🕔 March 23, 2018

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் தேசிய காங்கிரசில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எஸ். ஜௌபர், விகிதாசாரப் பட்டிலினூடாக உறுப்பினராக்கப்பட்டுள்ள போதும், 06 மாதங்களுக்கு மட்டுமே அவருக்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பையின் சகோதரரான எம்.எஸ். ஜௌபர் என்பவர், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான கடந்த தேர்தலில், குதிரைச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இதனையடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரசுக்கு கிடைத்த விகிதாசார ஆசங்களில் ஒன்றினை தனக்கு வழங்குமாறு, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவிடம் ஜௌபர் மன்றாடியுள்ளார்.

இதனையடுத்து, 06 மாதங்களுக்கு மட்டுமே உறுப்பினராகப் பதவி வகிப்பதென்ற நிபந்தனையின் அடிப்படையில், உதுமாலெப்பையின் சகோதரர் ஜௌபருக்கு, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரசின் விகிதாசார பட்டியல் உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

மேலும், ஜௌபரிடம் 06 மாதங்களில் பதவி விலகும் ராஜிநாமா கடிதமொன்றும் கையொப்பமிட்டுப் பெறப்பட்டுள்ளதாகவும், தேசிய காங்கிரஸ் வட்டாரங்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

எவ்வாறாயினும், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரசுக்குக் கிடைத்த 05 விகிதாசார பட்டியலுக்கான ஆசனங்களில், 03 ஆசனங்களுக்கு, முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையின் தம்பி உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்