ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கண்டு பிடிப்பு: ஒரு நாளைக்கு ஒன்று எடுத்தாலே போதுமானதாம்

🕔 March 23, 2018

 ண்களுக்கான புதிய கருத்தடை மாத்திரை ஒன்றை உருவாக்கி, வொஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அண்மையில் முதல் கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்று எனும் கணக்கில் உட்கொண்டாலேயே, ஆண்களால் கருவை உண்டாக்க முடியாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஆண் கருத்தடை மாத்திரையிலுள்ள D.M.A.U. என அழைக்கப்படும் ‘டைமெதான்ட்ரோலோன் அண்டிகேனோயேட்’ என்ற மருந்து, விந்தணுக்களின் செயல்திறனை குறைத்துவிடும் எனக் கூறப்படுகிறது.

அதேசமயம், கருத்தரிக்க வைக்கவேண்டும் என ஆண்கள் விருப்பப்படும்போது, இந்த மாத்திரையை உட்கொள்வதை நிறுத்திவிட்டால், அன்றைய தினம் சுரக்கும் விந்தணுக்கள் இயல்பாக செயல்பட ஆரம்பித்து விடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முதல் கட்ட சோதனையாக, உடல் நலத்துடன் இருக்கும், 100 ஆண்களுக்கு இந்த மருந்தைக் கொடுத்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. சோதனை முடிவில் மேற்படி மாத்திரைகளை சாப்பிட்ட ஆண்களால் கருத்தரிக்கச் செய்ய முடியாமல் போயுள்ளது.

இதேவேளை, ஏனையஆண் கருத்தடை மருந்துகளால் ஏற்படும் ஹார்மோன் பற்றாக்குறை, கல்லீரல் பாதிப்பு போன்ற பக்கவிளைவுகளும் இந்த மாத்திரையினால் ஏற்படவில்லை எனவும் ஆய்வின் முடிவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இருந்தபோதும், D.M.A.U. எனும் இந்த மாத்திரை உட்கொண்டவர்களுக்கு, சிறிதளவு எடை கூடுவது, உடலிலுள்ள நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறைவது போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் தற்காலிக கருத்தடை வெற்றிகரமாக நிகழ்ந்ததாக ஆய்வுக்குழுவின் தலைவர்பேராசிரியர் ஸ்டெபானி பேஜ் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

அடுத்த கட்டமாக, நீண்டகால அடிப்படை யில் D.M.A.U. மாத்திரைகளின் பலன்கள் மற்றும் பக்க விளைவுகளை அறியும் சோதனைகள் துவங்கியிருப்பதாகவும் ஸ்டெபானி தெரிவித்து உள்ளார்

Comments