நம்பிக்கையில்லா தீர்மானத்தை, நான் எதிர்க்கிறேன்: அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

🕔 March 22, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை, தான் எதிர்ப்பதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மாத்திரம் பொறுப்பாக முடியாது என்று தெரிவித்து துமிந்த; “ஜனாதிபதி உட்பட, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, சுதந்திரக் கட்சிக்குள் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதில் முன்னின்று செயற்பட்ட குழுவினர், ஶ்ரீலங்கா சுதந்திரக் கடசிக்கு இது தொடர்பில் எவ்வித தெளிவுபடுத்தல்களையும் வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்