முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர், போதை மாத்திரையுடன் கைது

🕔 March 21, 2018

பரொருவர் 600 ட்ரமடோல் மாத்திரைகளுடன் நேற்று செவ்வாய்கிழமை இரவு, கல்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், கல்பிட்டி பிரதேச சபைக்கான கடந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கல்பிட்டி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 32 வயதுடைய மேற்படி நபர், நீண்ட காலமாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருபவர் என, பொலிஸாரின் புலனாய்விலிருந்து அறியப்பட்டுள்ளது.

நேற்றிரவு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Comments