ஹரீஸ் துரோகமிழைத்து விட்டார்; கல்முனை மக்கள் குற்றச்சாட்டு

🕔 March 20, 2018

– அஹமட் –

ல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியல் உறுப்பினர்களாக முஸ்லிம்கள் இருவருக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளமை அநீதியானது என்றும், இது விடயத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் – கல்முனை முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து விட்டார் எனவும் அப்பிரதேச முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில், இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்திலேயே முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது.

இந்த நிலையில் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக வட்டார ரீதியில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 9367 ஆகும் . அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் பெற்ற மொத்த வாக்குகள் 1010 ஆகும்.

இதனையடுத்து, கல்முனை மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 04 பட்டியல் வேட்பாளர்களை நியமிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆயினும், 25 வீதம் பெண் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனும் நிபந்தனைக்கு இணங்க, ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடைத்த 04 பட்டியல் ஆசனங்களையும் பெண்களுக்கே வழங்க வேண்டியேற்றப்பட்டது.

இந்த நிலையில், அவற்றில் 02 ஆசங்கள் முஸ்லிம் பெண்களுக்கும், 02 ஆசனங்கள் தமிழ் பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்தப் பகிர்வானது நியாயமற்றதாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த நியாயமற்ற பகிர்வுக்கு துணை போனதன் மூலம், முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவர் எனும் வகையில் பிரதியமைச்சர் ஹரீஸ் – கல்முனை பிரதேச முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து விட்டார் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கடசியின் பட்டியல் உறுப்பினர்களாக நடராசா நந்தினி மற்றும் கணபதிப்பிள்ளை புவனேஸ்வரி ஆகிய இரு தமிழ் பெண்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்