அவசரகாலச் சட்டம் நீக்கம்; வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கையெழுத்து

🕔 March 18, 2018

நாட்டில் அமுலாக்கப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பில் ஜனாதிபதி கைச்சாத்திட்டுள்ளார்.

ஜனாதிபதியின் ஜப்பான் விஜயத்தின் பின்னர் அவசரகால சட்டம் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், நேற்று சனிக்கிழமை நாடு திரும்பியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவசரகால சட்டத்தை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட்டார்.

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்கள் காரணமாக, ஜனாதிபதிக்கிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், கடந்த 06ஆம் திகதி அவசரகால சட்டம் அமுலாக்கப்பட்டது.

இந்த சட்டத்தை 14 நாட்களுக்கு மேல் நீடிப்பதாக இருந்தால், நாடாளுமன்றத்தில் அனுமதிபெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்போது நிலவும் சுமூகமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்