அமித் வீரசிங்க உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

🕔 March 18, 2018

ண்டி மாவட்டத்தில் நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலின் பிரதான சூர்திரதாரிகளில் ஒருவர் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மஹசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்கவையும் மேலும் 09 பேரையும்  எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய மற்றும் கலகெதர நீதவான் நீதிமன்றங்கள் இன்று சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் இனவாதத் தாக்குதலை மேற்கொண்ட அமித் வீரசிங்க உள்ளிட்ட 10 பேரையும் கடந்த 08ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.

அமித் வீரசிங்க உள்ளிட்ட0 8 சந்தேக நபர்களை தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்திலும், சுரேந்திர சூரவீர உள்ளிட்ட 02 சந்தேக நபர்களை கலகெதர நீதவான் நீதிமன்றத்திலும் ஆஜர்செய்த போதே மேற்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

Comments