ஜனாதிபதியின் ஜப்பான் குழுவில் ஞானசார தேரர் இல்லை: ஊகங்களை மறுத்தார் ஒஸ்ரின் பெனாண்டோ

🕔 March 15, 2018

ப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினுடைய குழுவில், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தே ஞானசார தேரர் உள்ளடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள ஊகத்தினை, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ மறுத்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் தூதுக்குழுவில் பௌத்த பிக்கு என்ற வகையில், உலபன சுமங்கல தேரர் மட்டுமே அடங்கியுள்ளார் என்றும், அவர் கூறினார்.

ஆங்கில ஊடகமொன்று, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோவிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

“ஜனாதிபதியின் குழுவில் அடங்கியுள்ளவர்களின் பெயர்கள் தற்போது நினைவில் இல்லை என்றாலும் கூட, ஒரு தேரர் மட்டுமே, அந்தக் குழுவில் அடங்கியிருந்தமையை உறுதிப்படுத்த முடியும்” எனவும் பெனாண்டோ குறிப்பிட்டார்.

“பாடசாலையொன்றின் அதிபராகவுள்ள சுமங்கல தேரரை, அவருடைய பணியிலிருந்து விடுவிப்பதற்கான கடிதத்தை நான்தான் வழங்கினேன் என்பதால், அந்த விடயம் எனக்கு நினைவில் இருக்கிறது” என அவர் கூறினார்.

எவ்வாறாயினும், உலபன சுமங்கல தேரர் – பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரின் நெருங்கிய கூட்டாளியாவார். ஞானசார தேரரை பிணையில் எடுப்பதற்கு உலபன தேரர் உதவியிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட நிகழ்வொன்றில், ஞானசார தேரரும் பங்கேற்றிருந்தமை குறித்து, பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதலில் சம்பந்தப்பட்டார் எனக் கூறப்படும் ஞானசார தேரர், அந்தச் சூடு தணிவதற்குள், ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொண்டமையானது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்பான செய்திக்கு: ஜனாதிபதி கலந்து கொண்ட ஜப்பான் நிகழ்வில், ஞானசார பங்கேற்பு; படங்களும் வெளியாகின

Comments

புதிது பேஸ்புக் பக்கம்