சமூக வலைத்தளங்களை முடக்கியதால், அரசாங்கத்துக்கு எப்படி லாபம் கிடைக்கிறது; ஜனாதிபதியின் கூற்றை விளக்குமாறு நாமல் கோரிக்கை

🕔 March 15, 2018

மூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்தமை காரணமாக, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஒவ்வொரு நாளும் 200 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

சமூக வலைத்தளங்களை தடை செய்தமையினால் தினமும் 200 மில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு கிடைக்கின்றமை சாத்தியமா என்று, அவர் வினவியுள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் நாமல் ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கமளிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘சமூக வலைத்தளங்களை தடை செய்துள்ளமையினால், 200 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியது எவ்வாறு சாத்தியம்? அது தொடர்பில் ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்’ என நாமல் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்