அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர், பிரதி மேயர் பதவிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு

🕔 March 14, 2018

– அஹமட் –

க்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவிக்கு சக்கி அதாஉல்லாவின் பெயரை, தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. அதேவேளை, அந்த சபையின் பிரதி மேயர் பதவிக்கு அஸ்மி அப்துல் கபூர் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

மேயர் பதவிக்கு பெயரிடப்பட்டுள்ள சக்கி என்பவர், தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவின் மூத்த புதல்வராவார்.

கடந்த சபையிலும் இவர் மேயராகப் பதவி வகித்திருந்தார்.

இதேவேளை, பிரதி மேயராகப் பெயரிடப்பட்டுள்ள அஸ்மி அப்துல் கபூர், கடந்த மாநகர சபையிலும் தேசிய காங்கிரசின் உறுப்பினராக இருந்தவராவார்.

இவர்கள் இருவரின் பெயர்களையும் மேற்படி பதவிகளுக்காக, தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார்.

Comments