கண்டி கலவரம் தொடர்பில், 280 பேர் கைது: பொலிஸ் பேச்சாள் ருவன் குணசேகர

🕔 March 13, 2018

ண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரை 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கடந்த 04ஆம் திகதியிலிருந்து நேற்று திங்கட்கிழமை மாலை வரை கிடைக்கப் பெற்ற முறைபாடுகளுக்கு அமையவே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று  செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே, இந்தத் தகவலை அவர் வெளியிட்டார்.

கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற வன்செயல்கள் தொடர்பில் 5,6,7 மற்றும் 8ஆம் திகதிகளில் அதிகம் முறைபாடுகள் கிடைத்தாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Comments