துப்பாக்கி காட்டி சாரதியை தாக்கிய தம்பதியினருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 March 13, 2018

 தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரின் மனைவி தாரக பெரேரா ஆகியோரை தொடர்ந்தும் 27ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

தனியார் பஸ் ஒன்று, தமது வாகனத்துக்கு வழி விடாமல் பயணித்ததாகக் கூறி,  தென் மாகாண சபை உறுப்பினர் கசுனும் அவரின் மனைவியும், குறித்த பஸ்ஸின் சாரதியை தாக்கியிருந்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைத்தளத்தில் பரவியிருந்தது.

இந்தச் சம்பவம் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்றது.

மாகாண சபை உறுப்பினரின் மனைவி இதன்போது துப்பாக்கியொன்றினை கையில் வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, மேற்படி தம்பதியினரை பொலிஸார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து 09 எம்.எம். ரக துப்பாக்கி ஒன்றினையும் 05 ரவைகளையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன் பின்னர் இவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, இன்றைய தினம் வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மேற்படி தம்பதியினரை நீதிமன்றில் மீண்டும் ஆஜர் செய்த போது, அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்