டிப்பர் லொறி பள்ளத்தில் வீழ்ந்ததில், 03 பேர் படுகாயம்

🕔 March 12, 2018

– க. கிஷாந்தன் –

த்தனை – குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு  10 மணியளவில், டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு, சேதன பசளை ஏற்றிச்சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த வாகனத்தை பின்நோக்கி செலுத்தும் போது – சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததால், விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments