உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 98 பேர், வைத்தியசாலையில் அனுமதி

🕔 March 11, 2018

ணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 98 பேர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஊர்காவல்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டவர்களே, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலயத்தில் காலை நடைபெற்ற மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

அந்த உணவினை உட்கொண்டவர்கள் திடீரென உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டமையினை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவல்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments