புத்தளத்தில் ஹோட்டல், தீயினால் நாசம்

🕔 March 11, 2018

புத்தளம் – ஆனமடுவ பகுதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டல் இன்று ஞாயிற்றுக்கிழமை தீயினால் எரிந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக ஹோட்டலின் கணிசமான பகுதிகள் சேதமடைந்தள்ளன.

இதேவேளை, நாசாகார செயல் மூலமாக இந்த ஹோட்டல் எரிந்ததா, அல்லது விபத்தின் மூலம் தீப்பற்றியதா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டியில் கடந்த வாரம் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்கள் காரணமாக, மொத்தமாகவும், பகுதியளவிலும் 113 வர்த்தக நிலையங்கள் சேதமடைந்தன.

இதற்கு முன்னர் அம்பாறை நகரில் நடைபெற்ற இனவாத தாக்குதல் காரணமாகவும் பல வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments